உலகின் முதல் ரோபோ விண்வெளி மனிதன் விஞ்ஞானியுடன் பேசுகிறான்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலகின் முதலாவது ரோபோ-ஆஸ்ட்ரானாட் (விண்வெளி ஆய்வுக்கான ரோபோ இயந்திர மனிதன்) விண்வெளியில் இருந்துகொண்டு உரையாடிவருவதாக ஜப்பான் கூறியுள்ளது.

கடந்த ஆகஸ்டில் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கிரோபோ என்ற ஜப்பானின் சிறிய ரோபோ, இப்போது சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள ஜப்பானிய கட்டளை அதிகாரி கோய்ச்சி வக்காட்டாவுடன் ரோபோ இயந்திர மனிதன் உரையாடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கிரோபோவின் உரையாடல் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்காவிட்டாலும், மனிதர்களைப் போல பதிலளிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரோபோவை தயாரித்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். போகப்போக புதிய விடயங்களையும் கற்றுக்கொள்வதற்கு இந்த கிரோபாவால் முடியும்.

கிரோபோவுக்கும் கிரோபோவைப் போன்ற ரோபோ விண்வெளி வீரர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நெடிய விண்வெளி பயணங்களின் போதான துணையாக மட்டுமல்லாமல் பூமியிலும், வயோதிபர்களுக்கும் தனிமையில் வாழ்பவர்களுக்கும் இந்த ரோபோ பெருந்துணையாக இருக்கும் என்றும் அதனை வடிவமைத்தவர்கள் நம்புகின்றனர்.